Mnadu News

இலங்கைக்கு செல்லும் “சூரியா 42” படக்குழு!

அண்ணாத்த படத்துக்கு பிறகு இயக்குநர் சிவா தற்போது நடிகர் சூரியாவை வைத்து இயக்கி வரும் படம் “சூரியா 42”. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பை இலங்கையில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

இலங்கையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் அங்கேயே மொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this post with your friends