Mnadu News

அரிசி கொள்முதலில் தமிழகம் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது: இந்திய உணவு கழகம் தகவல்.

சென்னையில் இந்திய உணவு கழக அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் சென்னை மண்டல மேலாளர் தேவேந்திரர் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் விலை நிர்ணயித்தல், பொது விநியோக முறைக்காக தானியங்களை விநியோகித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர சிங், தமிழ்நாடு முழுவதும் சத்தான செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் எனவும் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவித்தார். அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளதாகவும் இதனை சமாளிக்க பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி மற்றும் கோதுமை வாங்கப்படுவதாகவும் தேவேந்திர சிங் கூறினார்.

Share this post with your friends