Mnadu News

குஜராத்தில் காங்கிரசில் இணைந்த பாஜக அமைச்சர்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேவேளை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனிடையே, குஜராத் மாநில பாஜக அரசியில் அமைச்சராக இருந்த 75 வயதான ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரசில் இருந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.

Share this post with your friends