Mnadu News

கேள்விதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை: முதல் அமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

வானவில் மன்றம் என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்திருப்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அதில், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை! பகுத்தறிவைப் பள்ளிப்பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் ‘வானவில் மன்றம்’; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு! கற்றல் இனிமையாகட்டும்! கல்வி முழுமையாகட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends