Mnadu News

தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ப்ளீச்சிங் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகி தீ மல மலவென பரவி ஏறிய தொடங்கியது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர நீண்ட நேரம் போராடினர். விபத்து ஏற்பட்ட போது பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends