புதுமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில், பரத், வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் “மிரள்”. ராட்சசன் படத்தை தயாரித்த அசிஸ் ஃபில்ம் ஃபேக்டரி இப்படத்தை தயாரித்து வெளியிட்டது.
நவம்பர் 11 அன்று வெளியாகி அனைத்து தரப்பிலும் இருந்து தரமான விமர்சனங்களை இப்படம் அள்ளியது. பரத் கலை வாழ்வில் முக்கியமான படமாக இப்படம் அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் ₹1 கோடி வரை இப்படம் வசூல் செய்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியின் மூலம் பரத்திடம் சில முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.