Mnadu News

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சர்ச்சைக் கருத்து: தலைவருக்கு இஸ்ரேல் கண்டிப்பு.

இஸ்ரேலிய தூதர் நவோர் கிலான் தனது ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லேபிடுக்கு ஒரு திறந்த மடல். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மீது அவர் முன்வைத்த விமர்சனத்தை ஒட்டி இதை எழுதுகிறேன். இதனை எனது இந்திய சகோதரர்கள், சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஹீப்ரூவில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். அந்தக் கடிதம் சற்று நீளமானது. அதனால் ஒரு வரியில் அதனை விளக்குகிறேன். நடாவ் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்திய கலாசாரத்தில் விருந்தினரை கடவுளுடன் ஒப்பிடுவர். ஆனால் அதனை நீங்கள் எவ்வளவு மோசமாக சிதைக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சிதைத்துள்ளீர்கள். உங்களை கோவை சர்வதேச திரைப்பட திருவிழாவின் தேர்வுக் குழு தலைவராக அழைத்துள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்த மரியாதையை, அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends