Mnadu News

கண்களை குளமாக்கும்”மண்ணுமிங்கே” பாடல்!

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி அகர்வால் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்த படம் “கலகத்தலைவன்”. அரோல் காரொலி பாடல்களுக்கும், ஶ்ரீ காந்த தேவா பின்னணி இசையிலும் பணியாற்றி இருந்தனர்.

பொதுவாகவே மகிழ் திருமேனி படங்களில் வரும் பாடல்கள் நல்ல கவித்துவமாக அமைவது வழக்கம். அப்படி இந்த படத்தின் கதையை கூறும் பாடலான கவிஞர் ஏக்நாத் வரிகளில் உருவான “மண்ணுமிங்கே” என்கிற இயற்கை பாடும் பாடலாக இது அமைந்துள்ளது. பத்மலதா ராம் ஆனந்த இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் லீரிக் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

தற்போது வரை இப்படம் 3.10 கோடிகளை வசூல் செய்து வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

சாங் லிங்க் : https://youtu.be/SLrRDhbVD4w

Share this post with your friends