Mnadu News

குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள 92 காலிப் பணியிடங்களுக்கு கடந்த சனிக்கிழமை தேர்வு நடைபெற்றது.
தேர்வை எழுதுவதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த முறை 200 கேள்விகள் கொண்ட தேர்வு வினாத்தாள் 140 பக்கங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, ஒவ்வொரு கேள்வியும் பெரிதாக இருந்ததால் விடையளிக்க தாமதம் ஏற்பட்டதாகவும் தேர்வர்கள் கூறினர்.
இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends