Mnadu News

இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை! மர்ம நபர்கள் வெறிச்செயல்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் 25 வெளிநாட்டினர் உள்பட 265 பேர் பலியாகினர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்பயங்கரவாத தாக்குலில் தொடர்புடையதாக கூறி இலங்கையின் மட்டக்குளியா நகரை சேர்ந்த 38 வயதான முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பதுர்தீன் நேற்று முன்தினம் மட்டக்குளியா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பதுர்தீனை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Share this post with your friends