Mnadu News

கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

காலை உணவு:

காலை உணவுக்கு இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், ஆப்பம் ஏற்றது.  உளுந்தில் தசைக்கும் நரம்புக்கும் தேவையான வலிமையைக் குடுக்கும் சத்துப்பொருட்கள் உள்ளன. பயிறில் புரதச்சத்து இருப்பதால் விட்டமின் சி குறைப்பாட்டை தடுக்கிறது. சட்னியில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் இதயத்தை வலுப்படுத்தப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. தேங்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. குடலுக்குள்ளே ஏற்படும் புண்களை ஆற்றுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது. மல்லிக்கீரை இரத்த சோகையை போக்குகிறது.

மதிய உணவு:

மதிய உணவுக்கு புழுங்கல் அரிசி சாதம் சிறப்பானதாக  இருக்கும். கீரை வகைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை அதே சமயம் செரிமானம் ஆக நேரம் எடுத்துக் கொள்ளும். முளைக்கீரை , சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை என முடிந்தவரைக்கும் தினம் ஒரு கீரைச் சேர்க்க வேண்டும். சாதத்திற்கு ரசம், சாம்பார் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதால் சிசு வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.   ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு வயிற்றில் உண்டாகும் வாயுவை அகற்றுவதுடன் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையையும் போக்குகிறது. பூண்டு கொழுப்பை கரைப்பதுடன் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. சீரகம் தலைச்சுற்றல் வாந்தியையும் பித்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இரவு உணவு:

 

Related image

இரவு வேலைகளில் செரிமான சுரப்பிகள் செயல்படுவதன் வீரியம் குறைவு எனவே எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏற்கனவே வயிறு குமட்டலுடன் இருக்கும் கர்ப்பிணிகள் செரிக்காமல் அஜீரணக்கோளாறுகளில் சிக்கினால் மிகப்பெரிய அளவில் விபரீதத்தை சந்திக்க நேரிடும். உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பதை  தவிர்க்க வேண்டும்.  நொறுக்குத் தீனிகளை  தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

நண்டு இறால் சுறா மீன், காபி, டீ, பப்பாளி, அன்னாசி, ஐஸ்கிரீம், பனீர், சீஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டில் பானங்கள், மைதா உணவுகள் தவிர்க்க வேண்டும்

Share this post with your friends