Mnadu News

கவனக்குறைவால் மாற்றுத்திறனாளி முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜோதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கனியம்மாள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூருக்கு அடைக்கலாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிளில் இருசக்கரவவாகனம் மோதியது. இதில் மூன்று சக்கர சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளி சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோதி, கனியம்மாள் இருவரும் காயத்துடன் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி முதியவரின் உடலை கைப்பற்றிய திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends