ஜி20 குழுவின் தலைவர் பதவியை இன்று முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.உலகின் பொருளாதார ரீதியாக வளமான நாடுகளின் குழுவான ஜி20 மாநாட்டிற்கு இந்தியா ஒரு வருடம் முழுவதும் தலைமை தாங்கும். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவின் ஜி20 நிகழ்ச்சி நிரலானது உள்ளடக்கியதாக, செயல் சார்ந்ததாக, லட்சியம் சார்ந்ததாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்.இந்தியாவின் ஜி 20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையிடமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம். மனிதத்தை மையப்படுத்திய உலகமயமாக்கல் நோக்கி, புதிய முன்னுதாரணம் ஏற்படுத்திட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். மிகவும் சக்திவாய்ந்த ஜி20 நாடுகளிடையே, பிற நாடுகளுடனும் நேர்மையான உரையாடலை இந்தியா ஊக்குவிக்கும்.குடிமக்கள் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஜனநாயகத்தின் அடித்தளதிற்கு இந்தியா பங்களிக்கும்.
இந்தியாவின் ஜி 20 முன்னுரிமையானது, நமது ஒரே பூமியை குணப்படுத்துவதில், ஒரு குடும்பத்திற்குள் நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும், நமது ஒரே எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கொடுப்பதிலும் கவனம் செலுத்தும். இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியானது, ஒற்றுமையின் உணர்வை ஊக்குவிக்கவும், ‘ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உணர்வை உணரவும் செயல்படும். உணவு, உரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியலற்றதாக்க இந்தியா முயல்கிறது. அதனால் புவிசார் அரசியல் பதட்டங்கள் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்காது எ;னறு பதிவிட்டுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More