Mnadu News

தேர்தலுக்கு மோடி வருவதற்கு முன்பே ‘ஈடி’ வந்துவிடும்: கவிதா குற்றச்சாட்டு.

தெலங்கானா முதல் அமைச்சா கே. சந்திரசேகர ராவின் மகளும், சட்டப்பேரவை உறுப்பினருமான கவிதா, டெல்லியில் நடந்த மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக எங்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பார்க்கிறது. ஆனால், அங்கிருக்கும் நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றுவோம். 2023ஆம் தேர்தலுக்கு முன்பு, பாஜக தரம்தாழ்ந்த யுக்திகைளைக் கையாள்கிறது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, சுமார் 9 மாநிலங்களில் ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டு, முறைகேடான வழியில் அங்கெல்லாம் பாஜக ஆட்சியமைத்துள்ளது. எனவே, குழந்தைகளுக்குக் கூட தெரியும், தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருவதற்கு முன்பே அமலாக்கத் துறை வந்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends