இளம் நடிகர் கதிர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. மேலும் இந்த படம் உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், பல விருதுகளையும் பெற்றது.
சமீபத்தில் இந்த படம் பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவிலும், ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட்டு 3 விருதுகளை பெற்றுள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.