தமிழகத்தில் ‘பிளஸ் 2’ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி நாளை மறுதினம் ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் மதிப்பெண்கள் மாணவர்களின் அலைபேசிக்கு குருஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிட்டுள்ளனர். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்றும் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.