கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான ஆந்த்ரே ரஸ்ஸல்,
இன்று நடக்கும் போட்டியில் பெங்களூரு அணியின் பவுலர்களை மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்தத் தொடரில் அணியின் வெற்றிக்காக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வந்த ரஸ்ஸல்.
கடந்த ஆட்டத்தின்போது ரஸ்ஸல் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இந்நிலையில் அவர் விளையாடும்பட்சத்தில் அவரது ஆட்டம் நிச்சயம் பெங்களூரு அணிக்குத் தலைவலியாக அமையும்.
ஐ பி எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி விளையாடவுள்ளது .கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கும் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது .
இதுவரை நடத்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் தான் வென்றுள்ளது இதனால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது .
இன்று நடக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.
கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் காயமடைந்து இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .பெங்களூரு அணியுடன் விளையாண்ட கடந்த போட்டியில் ரஸ்ஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .