2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாதம் இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது .உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான அணி பட்டியலை அணைத்து நாடுகளும் அவரவர் அணி வீரர்களை அறிவித்து வருகிறார்கள் .
இந்நிலையில் பாக்கிஸ்தான் நாடும் உலகக்கோப்பையில் விளையாட போகும் அணி பெயர் விவரங்களை தற்போது அறிவித்துள்ளது.உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடரில் பாகிஸ்தான் இங்கிலாந்தில் விளையாடுகிறது.
உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளநிலையில் . சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி பட்டியல் :
சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹஸ்னைன்