கடந்த ஆண்டு தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் சென்னை உள்பட முக்கிய நகரங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் . இந்நிலையில், ‘ரங்கஸ்தலம்’ கோடை விடுமுறைக்கு தமிழில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தமிழில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா வெளியிடவுள்ளார்.