இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படம் மே 17ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் படத்தில் நகைச்சுவை காட்சி இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, சில நகைச்சுவை காட்சிகளை மீண்டும் படமாக்கி படத்தில் இணைக்குமாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால் தான் இந்த படம் மே 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.