சத்தீஸ்கரில், முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இந்நிலையில், பஸ்தாரில் பழங்குடியின சமூகங்களுக்கான சத்தீஸ்கர் அரசின் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்,பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா,சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் கோஷம் வெற்று முழக்கம் அல்ல. மாநிலத்தில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் மட்டுமே உள்ளது. இதற்கு முன் பா.ஜ.க, ஆட்சியில் பயம், பசி மற்றும் ஊழல் நிகழ்ந்தன. அப்போது மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது.தற்போது, காங்.கிரஸ் அரசு மக்களுக்காக உழைக்கிறது. பா.ஜ.க, ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை. நீங்கள் அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை பா.ஜ.க, அரசு சிதைத்து விட்டது. இந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளது. என்று பேசி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More