அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல, நமது நாட்டில் உரிமம் பெறாமல் துப்பாக்கிகளை வைத்திருக்க உரிமம் இல்லை என்றும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு நிலப்பிரபுத்துவ மனுப்பான்மை என்றும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான போக்கு என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.இந்நிலையில், உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து இந்த வழக்கிற்கு மூன்று வாரங்களுக்கு பதில் அளிக்க, மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More