இயக்குனர் அதிரன் ஆதியன் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடித்து வரும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு வர தயாராகவுள்ளது.
இந்நிலையில், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகர் தினேஷ் கூறியதாவது “இந்த படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும்.
ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்” என்று அவர் கூறியுள்ளார்.