மதிமுகவின் 26-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். பின் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஏராளமான மதிமுக தொண்டர்கள், மாநில செயலாளர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 22 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலிலும் திமுக வெற்றிப் பெறுவதோடு, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.