பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ரா சற்குணம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாமகாவையும், இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த போராளிகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக சற்குணம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கேட்டு பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கு வருகிற 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.