Mnadu News

வளர்ச்சியடையாத மாவட்டங்கள் மேம்பட வேண்டும்: ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

உ.பி., யின் வாரணாசியில் ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு துவங்கியது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜி20 நாடுகளின் வெளிநாடு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசியுள்ள பிரதமர் மோடி,இந்தியாவில், டிஜிட்டல் மயமாக்கல் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நிலையான வளர்ச்சியை அடைய பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியம். நிலையான வளர்ச்சி இலக்குகளை பின் தள்ள விடாமல், இருப்பது நமது பொறுப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவில் வளர்ச்சியடையாத 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதோடு, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது முக்கியம்.நமது முயற்சிகள் விரிவானதாகவும், நியாயமானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும். கூட்டாளி நாடுகளுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. என்று கூறி உள்ளாhர்.

Share this post with your friends