Mnadu News

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, ராணுவமும் போலீசாரம் அப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.உடனடியாக ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

Share this post with your friends