Mnadu News

பீகாரில் மகாபந்தன் கூட்டணி அரசில் பிளவு: நிதிஷ் அரசின் கூட்டணி அமைச்சர் திடீர் ராஜினாமா.

பீகார் முன்னாள் முதல் அமைச்சரான ஜிதன் ராம் மாஞ்சியின் மகனான சந்தோஷ் குமார் சுமன், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மகாபந்தன் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். சுமன் பீகாரில்; பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் குமார்,மகாபந்தன் கூட்டணியில் நாங்கள் அனைவரும் நிதிஷ் குமாரை எங்கள் தலைவராகவே கருதினோம். இப்போதும் அவரை அப்படியே கருதுகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக என்னுடைய கட்சியை அவர்களுடன் இணைத்துவிடும்படியான யோசனை முன்வைக்கப்பட்டது. ராஜினாமா என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை. இது கட்சியில் இருக்கும் அனைவரையும் சந்தித்து பேசி எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் ஒரு சுதந்திரமான கட்சி. பாஜக ஏன் எங்களுக்கு அழுத்தம் தரவேண்டும்.நான் கட்சிக்காக வேலை செய்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு வந்தால் நாங்கள் கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்வோம்” என்று; தெரிவித்துள்ளார்.

Share this post with your friends