இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த லக்ஷயா செனுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தனது அனுபவத்தால் காந்த் 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 21-18, 21-16 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் கா லாங்கை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 3-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தை ஸ{ யிங்குடன் மோதினார். இதில் சிந்து 18-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More