Mnadu News

குடும்பம்-கட்சி-கூட்டணி: அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’ ஃபார்முலா குறித்து மாயாவதி விமர்சனம்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவருமான் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘என்டிஏ’ எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ள ‘பிடிஏ’ என்பது இந்த கடினமான காலக்கட்டத்தில் அவர்களுக்கான ஒரு ரைமிங் தானே தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்களின் பிடிஏவின் அர்த்தம் குடும்பம், கட்சி, கூட்டணி, அதாவது பரிவார், தள், அலையன்ஸ் என்பதாகும்.அது மட்டும் அல்லாமல் அவை யாவும், குறிப்பிட்டக் கட்சிகளின் கூட்டணி. எனவே அவர் குறிப்பிட்டுள்ள வகுப்பு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends