பீகார் முதல் அமைச்சர்; நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வந்த ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, இரு தினங்களுக்கு முன்பு அதில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஜிதன் ராம் மஞ்சியும் அவரது மகனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான சந்தோஷ் சுமனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதன் ராம் மஞ்சி, எங்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இது குறித்துதான் அமித் ஷாவிடம் பேசினோம் எனத் தெரிவித்தார்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசி உள்ள ஜிதன் ராம் மஞ்சி, “எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயலலாம். ஆனால், அவர்களுக்கு என்று ஒரு முகம் இருக்கும் என்று தோன்றவில்லை. பிரதமர் மோடிக்கு சவால் விடக்கூடிய தலைவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக வற்புறுத்தவில்லை. ஆனால், அவர்கள் எங்களை கூட்டணியில் இணைத்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More