Mnadu News

சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்: குடியரசு துணைத் தலைவர் விமர்சனம்.

மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், சட்டத்துக்கு மேலானவர்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. சட்டத்திலிருந்து விலக்கும் ஒருவராலும் கோர முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. சிலர் தங்களுக்கு சட்டரீதியிலான அறிவிப்பு கொடுக்கப்பட்டவுடன் சட்டத்தினை கையிலெடுத்து வீதியில் இறங்குகிறார்கள். சட்டம் யாரையும் விட்டு விடாது. பொதுச் சொத்துகள் மற்றும் காவல் துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சூழல்களை வளர நாம் எப்படி அனுமதிப்பது? இளைஞர்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை பார்ப்பதற்கு நீங்கள் பெருமைப்பட வேண்டும். இந்தியாவின் இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதது. இந்த வளர்ச்சி உங்களது பங்களிப்பால் மேலும் வளரும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும் எனறு கூறியுள்ளார்.

Share this post with your friends