Mnadu News

ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டு மனு மீது மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் திட்டக்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திட்டக்கோட்டையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் ஜூலை 29-ஆம் தேதி; வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்.இந்த நிலையில்.இந்தாண்டு அரசிதழில் எங்கள் கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, அரசிதழில் எங்கள் கிராமத்தின் பெயரை சேர்த்து வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதி கேட்டு அளிக்கப்படும் மனுவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதன்படி மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Share this post with your friends