Mnadu News

தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சகம் அறிக்கை.

மூல தன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு 56 ஆயிரத்து 415 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  1. தமிழகத்துக்கு ரூ.4,079 கோடியும்,
  2. பீஹாருக்கு ரூ.9,640 கோடியும்,
  3. மேற்குவங்கத்திற்கு ரூ.7,523 கோடியும்,
  4. அருணாச்சல் பிரதேசத்துக்கு ரூ.1,255 கோடியும்
  5. சத்தீஸ்கருக்கு ரூ.3,195 கோடியும்,
  6. கோவாவுக்கு ரூ.386 கோடியும்,
  7. குஜராத்துக்கு ரூ.3,478 கோடியும்,
  8. அரியனாவுக்கு ரூ.1,093 கோடியும்,
  9. ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ.826 கோடியும்,
  10. கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடியும்,
  11. மத்திய பிரதேசத்துக்கு ரூ.7,850 கோடியும்,
  12. மிசோரத்துக்கு ரூ.399 கோடியும்,
    13.ஒடிசாவுக்கு ரூ,4,528 கோடியும்,
  13. ராஜஸ்தானுக்கு ரூ. 6,026 கோடியும்,
  14. சிக்கிம்- க்கு ரூ.388 கோடியும்,
  15. தெலுங்கானாவுக்கு ரூ.2,102 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    அதோடு, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends