Mnadu News

அரபு நாட்டில் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அஜ்மான் நகரில், அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்தது பல வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை, கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

Share this post with your friends