Mnadu News

பாதியாகக் குறைந்த டெக் மஹிந்திரா சிஇஓ ஊதியம்: ஆண்டு அறிக்கையில் தகவல்.

கடந்த நிதியாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், தலைமை செயல் அதிகாரி சிபி குர்னானியின் சம்பளம் 32 கோடியாக குறைந்துள்ளது. இவர் சென்ற நிதியாண்டில் 63 கோடியே 40 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலைக்கு குர்னானியின் குறைந்த எண்ணிக்கையிலான பங்கு விருப்பங்களே இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.குர்னானி, பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களில் கடந்த நிதியாண்டில் 25 கோடியே 60 லட்சம் ரூபாய் ஈட்டினார். குர்னானியின் ஊதியம் பாதியாக குறைந்தாலும், அது டெக் மஹிந்திரா ஊழியர்களின் சராசரி வருமானத்தை விட 467 சதவீதம் அதிகமாகும்.

Share this post with your friends