Mnadu News

பிரதமர் பேச்சு எதிரொலி: பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்க்க முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்திய சில மணி நேரத்தில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் அவசரக்கூட்டம் ஆன்லைனில் நடந்தது.இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் சாதி, மதம், வழிபாடுகளைப் பொருட்படுத்தாமல், பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்கி செல்படுத்த முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரே பொது சிவில் சட்ட முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்த ஆன்லைன் கூட்டத்தில், ஏஐஎம்பிஎல்பி தலைவர், சாய்ஃபுல்லா ரஹ்மானி, மவுலானாக்கள் கலீத் ரஷீத் ஃபராங்கி மஹலி, இஸ்லாமிக் சென்டர் ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் ஏஐஎம்பிஎல்பி, வழக்குரைஞர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சட்ட ஆணையத்தின் முன் தங்களின் கருத்துக்களை மிகவும் வலிமையாக எடுத்துவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் சட்ட ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டன.

Share this post with your friends