மிஷ்கின்:
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் மிஷ்கின். இவர் படத்தில் கொலை, சண்டைக் காட்சிகளை எவ்வளவு ரசித்து எடுப்பாரோ அதே அளவுக்கு இவர் படத்தில் பாடல்களும் தனி கவனம் பெறும். இவரின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
நடிகர் மிஷ்கின் :
இயக்குநராக சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக அவர் அறிமுகம் ஆகி இருந்தாலும், அவ்வபோது தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நடிப்பார். அப்படி, அவர் நடித்து இயக்கிய “நந்தலாலா” படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்ககத்தி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் நடிகராக பெரும் கவனத்தை ஈர்த்தார். இது இப்படி சென்று கொண்டிருக்க மெகா பட்ஜெட் படங்களில் மிஷ்கின் தற்போது நடித்து உள்ளார். லியோ, மாவீரன் என இரண்டு நட்சத்திர நடிகர்களின் படங்களில் மிஷ்கின் முக்கிய ரோல் செய்துள்ளார் என்பது தான் ஹை லைட்.
இசையமைப்பாளர் மிஷ்கின் :
“டெவில்” எனும் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். “சவரக்கத்தி” படத்தின் இயக்குனர் “ஆதித்யா” இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் மிஷ்கின் அவர்களே அனைத்து பாடல்களையும் எழுதி, இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை “டெவில்” முதல் பாடலான “கலவி பாடல்” வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.
Link : https://youtu.be/llVNoc_dN3w