ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் , மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் 80 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இந்நிலையில், வாட்சன் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, 6 தையல் போடப்பட்டதாகவும், அதை மீறி ரத்தம் வடிய வாட்சன் விளையாடியதாக சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடியதற்காக வாட்சனை சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More