Mnadu News

திருப்பூரில் சாய ஆலை ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரித்து சேதம்

திருப்பூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (46). என்பவர்  பல்லடம் ரோடு, குப்பாண்டம்பாளையம், நத்தகாட்டுதோட்டம் பகுதியில் டையிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது  நிறுவனத்தில் துணிகளுக்கு சாயமேற்றுவதற்காக  டையிங்கின் பின்புறம் உள்ள  ரசாயன  கிடங்கில் துணிகளுக்கு சாயமேற்ற பயன்படுத்தியது போக மீதமிருந்த நைட்ரஜன் பெராக்சைடு கெமிக்கல் தேக்கிவைத்திருந்தனர். இந்நிலையில்   அந்த கிடங்கிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த டையிங் நிறுவன ஊழியர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கெமிக்கல் மற்றும் காலிகேன்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this post with your friends