மாமன்னன் வெற்றி:
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் “மாமன்னன்”. மாமன்னன் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழு நடத்தியது.
விழாவில் பேசிய நட்சத்திரங்கள்:
இந்த விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் “திரைப்படங்களில் பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்தில் கொடுத்ததுபோல், வருங்காலத்தில் பெண் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்”.
அதை தொடர்ந்து பேசிய உதயநிதி, “மாமன்னன் படம் தமிழகத்தில் 510 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டாவது வாரத்திலும் 470 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் படம் வெளியாக ஒன்பது நாட்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது வரை 52 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் ஓபன் அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் கதாபாத்திரம் என படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பலவற்றையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.
வைகைப்புயல் வடிவேலு பேசுகையில், இந்த படம் முழுக்க நகைச்சுவையை இல்லை என கூறினார்கள். நடப்பதில் கூட நகைச்சுவை வந்திடக் கூடாது என்று உதயநிதி கூறிவிட்டார் என வடிவேலு தெரிவித்தார்.
இறுதியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ” படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும், தன் வாழ்வில் தற்கொலை எண்ணத்தை நீக்கியது வடிவேலுவின் காமெடி என்றார். மேலும், இன்னும் பல விஷயங்களை அவர் எமோஷனல்லாக கூறி நெகிழ்ந்தார்.