லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் “லியோ”. பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19 அன்று திரைக்கு வர உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் இந்த வருட லிஸ்டில் லியோ டாப்பில் உள்ளது. லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் காட்சிகள் முடிவடைந்து உள்ளன என லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
லியோ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் எப்படி படம் ஆரம்பிக்கும் போது தனது கையில் இருந்த காப்பை விஜய் அவர்களோட காப்போடு மோதும்படி புகைப்படம் எடுத்திருந்தாரோ, அதேபோல முடிக்கும் தருவாயிலும் அதேபோன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் இதை வைரல் ஆக்கி வருகின்றனர்.
விரைவில் படத்தின் முழு ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என்றும், அடுத்தடுத்து ஒவ்வொரு சர்ப்ரைஸ்சும் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், செப்டம்பர் இறுதியில் மதுரையில் ஆடியோ வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது.