தளபதி விஜய் ஒரு இயக்குனருடன் மீண்டும் மீண்டும் இணைகிறார் என்றால் அந்த கணக்கு நிச்சயம் வீண் ஆகாது. ஆம், அப்படி லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைத்து அதில் உருவாகி வரும் படம் “லியோ”. பல முன்னணி திரை பிரபலங்களின் குவியலாக மாபெரும் எதிர்பார்ப்பை சுமந்து இப்படம் உருவாகி வருகிறது. ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் அதன் வீரியம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்போது சூட்டிங் நிறைவு செய்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஆம், சரியாக சொன்னால் இன்னும் 62 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதற்குள் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு என பல உள்ளன. ஆனால், தற்போதே லியோ 434 கோடிகளை கைபற்றி உள்ளதாக ஒரு ரிப்போர்ட் கிடைத்துள்ளது. அதாவது 250 முதல் 300 பட்ஜெட்டில் உருவாகி வரும் லியோ இப்போதே அதன் கணக்கை துவக்கி உள்ளது.
ஆம், அதன்படி கீழு வருமாறு :
சாட்டிலைட் உரிமை 70 கோடி (சன் டிவி), டிஜிட்டல் உரிமை 125 கோடி (நெட்பிளிக்ஸ்), தமிழ்நாடு உரிமை 90 கோடி, வெளிநாட்டு உரிமை 55 கோடி, கேரளா உரிமை 15 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை 20 கோடி, கர்நாடகா 12 கோடி, ஹிந்தி சாட்டிலைட் உரிமை 22 கோடி, ஹிந்தி திரையரங்க உரிமை 10 கோடி, ஆடியோ உரிமை 15 கோடி.
இப்படி பட வெளியீட்டுக்கு முன்பே சுமார் 434 கோடிகளை அள்ளி உள்ளது லியோ. இப்போதே 134 கோடிகள் தயரிப்பாளருக்கு லாபம், அதோடு படம் வெளியானால் நிச்சயம் பிளாக் பாஸ்டர் அடிக்கும், அதில் ஒரு பெரும் தொகை ஈட்டினால் இந்த வருடத்தின் மாபெரும் கலெக்ஷன் ரெகார்ட் லியோ செய்யும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
என்ன தான் “ஜெயிலர்” பாக்ஸ் ஆபீஸ்சை தற்போது அலற விட்டு கொண்டிருந்தாலும், லியோ அதை எல்லாம் மிஞ்சும் என்றும் அதற்கான யூகங்களை வகுப்பதில் தயாரிப்பு குழு முனைப்பாக உள்ளது குறிப்பிடதக்கது.