பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி சென்னை வருகிறார். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள தினத்தன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்லும் அவர் பா.ஜ.க., சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள தினத்தன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.