Mnadu News

தபால் வாக்கு செலுத்தும் வயது வரம்பு உயர்வு

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி அதற்கான ஆயத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தபால் வாக்கு செலுத்தும் வயது வரம்பை 80-இல் இருந்து 85 ஆக மத்திய சட்ட அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதானவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் சட்ட அமைச்சகம் தெரிவித்தது. அது மட்டுமல்லாமல் 2019ம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் வயதானவர்களுக்கு எளிதாக பரவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவை தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் எடுத்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் 85 வயதுக்கு உட்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends