Mnadu News

தேனியில் நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், தேனியில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரியகுளம் பகுதியில் நடைபயிற்சியின்போது அங்குள்ள உழவர் சந்தையில் பொதுமக்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Share this post with your friends