Mnadu News

குமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் காலை 9 மணிக்கு வந்தார்.

இதனை தொடர்ந்து மேட்டுக்கடையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை திருவனந்தபுரம் சாலையில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் வாகன பேரணியில் அமித்ஷா கலந்து கொண்டு திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

பேரணி முடிவடையும் இடமான பழைய பேருந்து நிலைய பகுதியான இரணியல் பிரிவு ரோடு சந்திப்பில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்.

அமித்ஷா வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன பேரணியின் போது சாலையின் அமித்ஷாவை வரவேற்பதற்காக சாலையின் இருபுறமும் பா.ஜ.க.வை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

Share this post with your friends