தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
இதனையொட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தமிழகம், புதுச்சேரியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். புதுச்சேரியில் இன்று காலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகாா்ஜூன காா்கே உரையாற்ற உள்ளாா்.
மேலும் கடலூா் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலியில் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர், விழுப்புரத்தில் வி.சி.கட்சி சாா்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து வானூா் கோட்டக்குப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே பிரசாரம் செய்யவுள்ளாா்.