Mnadu News

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு நேற்று சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 45க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

கெப்லுன் – ஷல்பா நகர் இடையேயான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends