7 பேர் விடுதலைக் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பது அதிமுக அரசின் நிலைப்பாடு எனவும், இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் அவர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் திமுக ஆட்சியின் போது நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோதும் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப அதிமுக அரசு 7 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More